எமது மக்களின் வளமான எதிர்காலம் பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் – சிவகுருபாலகிருஷ்ணன்

Thursday, May 4th, 2017

எமது மக்களின் வளமான எதிர்காலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி அதனை வளர்த்தெடுக்கும் அடிப்படையிலேயே கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கும், வழிகாட்டலுக்கும் அமைவாகவே நாம் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றோம் எனகட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளரும், வலிகாமம் பிரதேச ஒருங்கிணைப்பாளருமான சிவகுருபாலகிருணன் (ஜீவன்) தெரிவித்துள்ளார்.

பலாலி அன்ரனிபுரத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட அந்தோனியார் முன்பள்ளியைத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் எமது கட்சியின் இணக்க அரசியலினூடாக மக்களின் தேவைகளை இனங்கண்டு முன்னுரிமை அடிப்படையில் அவற்றுக்கானதீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இருப்பினும் மக்களின் தீர்க்கப்படாத தேவைகளும்,பிரச்சினைகளும் இருக்கவே செய்கின்றன.

இவற்றுக்கும் உரியமுறையில் தீர்வுகளைக் காணவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமன்றி எமது கட்சியின் நிலைப்பாடாகவும் இருக்கிறது.

அதிலும் மீள்குடியேற்றம் இடம்பெற்ற, இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றபகுதிகளில் மக்களுக்கானஅடிப்படைத் தேவைகள் யாவும் உரியமுறையில் தீர்த்துவைக்கப்படவேண்டும் என்பதைநாம் எப்போதும் வலியுறுத்திவருகின்றோம்.

ஆனால் தீர்வுகாணப்படக் கூடியபிரச்சினைகளுக்குக் கூட வடக்கு மாகாணசபையூடாக உரிய தீர்வுகளைப் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களின்பால் அக்கறையற்றவர்களாகவும்,வேலைத் திட்டங்களை முன்னெடுக்க திராணியில்லாதவர்களுமாக இருக்கின்றனர்.

வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களாலும், உசுப்பேற்றல்களாலும் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் கூட்டமைப்பினர் எதிர்காலத்திலும் மக்களுக்கான சேவைகளை முன்கொண்டு செல்வதற்கு தயாரான நிலையில் இல்லையென்பதையே சுட்டிக்காட்டவிரும்புகிறேன் என்றும் ஜீவன் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில் எமதுமக்களின் வளமான எதிர்காலத்தை பாதுகாப்பது மட்டுமன்றி அவற்றை வளர்தெடுக்கும் அடிப்படையிலேயே கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கும், வழிகாட்டலுக்கும் அமைவாகவே நாம் மக்கள் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஏதிர்காலத்திலும் தொடர்ந்துமுன்னெடுப்பதற்கும் தயாராகவும் இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

பலாலி அன்ரனிபுரம் மக்கள் விடுத்தகோரிக்கைக்கு அமைவாக அண்மையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்துகொண்டார்.

குறித்த பகுதியில் சிறார்களின் கல்வியை முன்கொண்டு செல்லவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்டதன் அடிப்படையில் முன்பள்ளியை நிர்மாணிப்பதற்காகவும், இளைய சமூகத்தின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தும் முகமாகவும் நிதியுதவியை டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்திருந்தமுன்பள்ளிக் கட்டிடத்தைமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில்கட்சியின்வலிகாமம் தெற்குபிரதேசநிர்வாகச் செயலாளர் வலன்ரைன்,கட்சியின் வலிகாமம் வடக்குபிரதேசநிர்வாகச் செயலாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related posts: