எனது அரசியல் பயணத்தை எவரும் அஸ்தமனம் செய்துவிட முடியாது – முதலமைச்சருக்கு சவால் விடுத்த அவைத் தலைவர் சிவஞானம்!

Tuesday, August 9th, 2016

முதலமைச்சரால் உருவாக்கப்பட்ட உள்ள+ராட்சிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவில் தனது பெயர் இடம்பெறாமை குறித்துத் தான் கவலையடையவில்லை என்றும் இதனூடாக தனது அரசியல் பயணத்தை யாரும் அஸ்தமனம் செய்து விட முடியாது என்றும் முதலமைச்சரிடம் அவைத் தலைவர் சிவஞானம் சவால் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சிகள் சபைகளுக்கு முதலமைச்சரால் உருவாக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழுவில் தனது பெயர் இடம்பெறாமை குறித்து இன்றைய 58 வது மாகாணசபை அமர்வில் விசனம் தெரிவித்த அவைத் தலைவர் சிவஞானம், தானும் ஒரு மாகாண சபை உறுப்பினர் என்பதையும் தனது செயற்பாடுகளை வேறு வழிகளில் பயன்படுத்துவதற்கான வழிகளில் தன்னை இணைத்துக் கொள்ளாமை குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

இதற்கு முதலமைச்சர் பதில்கூற வேண்டும் என்றும் இவ்விடயத்தில் உள்நோக்கம் ஏதும் இருக்குமானால், அதனை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றும், இவ்வாறான மறைமுக பழிவாங்கல் செயற்பாடுகள் ஊடாக தனது அரசியல் வாழ்வை யாரும் அஸ்தமனம் செய்து விட முடியாது என்றும் சவால் விடுத்த அவைத்தலைவர் தனது இறுதிக்காலம் வரை தனது அரசியல் பயணம் தொடரும் என்றும் இவ்விடயத்தில் தான் யாருடனும் சவாலாகச் செயற்படுவதற்குச் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts:


சுற்றுலாத் துறையைத் திட்டமிட்ட வகையில் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சின் செயலா...
மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் நாடுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்துத் தேவை - ஜனாதிபதி ரணில் விக...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - கவனம் செலுத்...