எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றில்!
Sunday, April 3rd, 2022இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரம் தொடர்பிலான தெரிவு குழு கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் ஏப்ரல் 7 ஆம் திகதி மிகைவரி சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு, துறைமுகம் மற்றும் விமான அபிவிருத்தி வரிச்சட்டத்தின் கீழ் நிதியமைச்சரினால் 2022.01.06ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி ,2022.01.11ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 08 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|