எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் – புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Friday, January 8th, 2021

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து இடங்களிலும் உள்ள அறிநெறி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மேல் மாகாணம், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ள இந்து, இஸ்லாம், பௌத்த, மற்றும் கத்தோலிக்க அறநெறி பாடசாலைகள் எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தாக புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: