எதிர்வரும் 10ஆம் திகதி பிரதமர் யப்பான் விஜயம்!

எதிர்வரும் 10ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார். 16ஆம்திகதி வரை யப்பானில் தங்கி இருக்கவுள்ள பிரதமர் இந்த விஜயத்தில் யப்பான் நாட்டு பிரதமர் சின்சோ அபே (Shinzo Abe) உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார். யப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்த விஜயம் மேலும் உதவும் என்று யப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தில் பிரதமருடன் அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம , மலிக் சமரவிக்கிரம, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் அசு மாரசிங்க ,பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க , மேலதிக செயலாளர் சமன் அத்துவெட்டி , திருமதி சந்திர பெரேரா ஆகியோரும் பயணம்செய்யவுள்ளனர்.
Related posts:
நாட்டில் மின்சார நெருக்கடியை தவிர்க்க புதிய திட்டம்!
இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள இஸ்ரேல் !
இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடையாக வழங்குகின்றது அவுஸ்திரேலியா!
|
|