எதிர்வரும் மே 11ஆம் திகதி பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கு நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!

Friday, May 8th, 2020

அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்கான தீர்மானத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் கடமைக்குத் திரும்புவது தொடர்பான அறிவித்தலையும் வழிகாட்டலையும் நிறுவனங்களின் தலைவர்கள் அறிவிப்பதாகவும், பல்கலைக்கழகங்களின் விரிவுரைகளை ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் பின்னர் அறிவிக்கும் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: