எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று 37 வருட சேவைக்கு ஓய்வு கொடுப்பதாக மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வரும் செப்ம்பர் 15ஆம் திகதியன்று தமது பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரேயே பதவியில் இருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதியே முடிவடைகிறது. எனினும் தனிப்பட்ட காரணங்களினால் முன்கூட்டியே பதவி விலக தீர்மானித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தாம் இலங்கையின் தேர்தல் பணிகளில் கடந்த 37 வருடங்களாக பணியாற்றியுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் !
இவ்வாண்டு பாரிய குற்றங்கள் அதிகரிப்பு!
இறக்குமதி செய்யப்படும் சில மருந்து வகைகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!
|
|