எதிர்வரும் சனிக்கிழமை வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கை!

Thursday, December 13th, 2018

அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழம்கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழை வீழ்ச்சி மற்றும் வேகமான காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் மீனவர்கள் தொழிலில் ஈடுபட வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிசெம்பர் 15 ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்  தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குறித்த பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோமீற்றர் வரை காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts: