எதிர்பார்த்தளவு கொரோனா தொற்று வடக்கில் ஏற்படவில்லை – சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவிப்பு!
Saturday, April 18th, 2020வடக்கில் கொரோனா நோய்த் தொற்று வீரியமாக இருக்கும் என்று நம்பினோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. அத்துடன் வடக்கில் தொற்று அதிகரித்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கும் பிரிவை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். தற்போது அவ்வாறான நிலைமை அங்கு காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – வடக்கில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டபோது நாம் அச்சமடைந்தோம். மத ஆராதனைக் கூட்டத்தை நடத்திய சுவிஸ் மத போதகரிடமிருந்தே அவருக்குத் தொற்று ஏற்பட்டிருந்தது.
இதனால் வடக்கில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். அப்படி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அல்லது வடக்கில் தனியான இடத்தை தயார் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம்.
ஆனால், நாங்கள் நினைத்தவாறுவடக்கில் நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. வடக்கில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்தே கொரோனா நோயாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோருக்கு தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்படவில்லை. அவர்கள் சுகதேகிகளாகவே இருக்கின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
|
|