எதிர்கால பயணங்கள் டிஜிட்டல் மயமானதாக இருக்க வேண்டும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

பாரம்பரிய முறைகளுக்கு பதிலாக நவீன தொழில்நுட் முறைகளை பயன்படுத்தி டிஜிட்டல்மயம் மற்றும் தொழில்நுட்பம் இணைந்ததான பயணம் ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தெற்காசியா முழுவதும் ஒன்றிணைந்து 1.7 பில்லியன் தொகை மக்களுடன் கூடிய சந்தையை பிரயோசனப்படுத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக எதிர்கால பயணம் அமைந்திருக்குமாயின், அது உலகின் பலமிக்க நாடுகளைக் கூட கடந்து செல்லக் கூடியதாக இருக்கும் என்று அமைச்சர் கூறுகின்றார்.
இந்திய பொருளாதார மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். 30 வருட காலமாக போரை எதிர்கொண்டிருந்த இலங்கை மக்கள் தற்போது ஜனநாயகத்தின் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
யுத்தம் காரணமாக நாட்டின் பொருளாதாரம், சமூகம் பாதிப்படைந்திருந்ததாகவும், தற்போது இந்த சவால்களை வெற்றிகொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு கூறியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பெறுமதியை மக்கள் அறிந்துகொள்ளாவிட்டால் எதிர்காலத்தின் அனைத்து முயற்சிகளும் வீண் போகும் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
Related posts:
|
|