எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எதிர்வுகூறல்!

Wednesday, October 20th, 2021

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றலுக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனீ லகதபுர தெரிவித்துள்ளார்.

தீப்பற்றலுக்குள்ளான கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் முதற்கட்ட அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9.5 கடல் மைலுக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றலுக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: