ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, January 28th, 2022

உலகில் ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கை 102 ஆவது இடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் இலங்கையும் ஊழல் நாடுகளின் வரிசையில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், 1977 ஆம் ஆண்டுக்கு பின்னரே நாட்டில் ஊழல் கலாசாரம் தோன்றியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு முன்னர் இருந்தது போன்று இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஏனைய நாடுகளை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், 1970 – 77ஆம் ஆண்டுவரை சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கத்தை பொறுப்பேற்றது சிறந்த உதாரணம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: