ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

Friday, January 25th, 2019

சிறைச்சாலைகளில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க விசேட குழுவொன்றினை நியமிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவிற்கு சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்புபடாத பிறிதோர் அரச நிறுவனத்தின் அதிகாரிகளை நியமிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ஊழல் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் 04 பேருக்கு எதிராக தற்போது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: