ஊர்காவற்றுறையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெட்டிக் கொலை!
Tuesday, January 24th, 2017ஊர்காவற்றுறை – சுருவில் பகுதியில் இளம் கர்ப்பிணி தாய் ஒருவர் விசமிகளால்கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்றுறையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
நெடுந்தீவை சொந்த இடமாக கொண்ட ந.கம்சிகா(வயது27) என்ற இளம் கர்ப்பிணி பெண் ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில் வசித்துவந்த நிலையில் இன்றைய தினம் மதியம் அவருடைய வீட்டுக்கு சென்ற விசமிகள் குழு ஒன்று குறித்த கர்ப்பிணி பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது.
இதனால் குறித்த கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி சம்பவத்தை அவதானித்த மக்கள் அந்த இடத்தை சூழ்ந்ததுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடிக்க முனைந்துள்ளனர். இதன்போது இருவர் பொதுமக்களிடம் சிக்கியுள்ளதுடன் மேலும் சிலர் தப்பி சென்றிருக்கின்றனர்.
இந்நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களால் மடக்கிபிடிக்கப்பட்டவர்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்து சென்றிருக்கின்றனர்.
Related posts:
|
|