ஊரடங்கு உத்தரவை மீறிய 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 18 ஆம் திகதிமுதல் இன்றுவரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 614 வாகனங்களையும் பொலிஸார்  பொறுப்பேற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் 20 ஆயிரத்து 926 நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: