ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 9 ஆயிரத்து 67 பேர் மீது தண்டனை விதிப்பு – பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Friday, May 29th, 2020

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் இன்று வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 66,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 778 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நேற்று இரவு 10.00 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணி வரையிலான நிறைவடைந்த 6 மணித்தியாலங்களில் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 35 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, மார்ச் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 22 ஆயிரத்து 591 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 9067 பேருக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:


சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பில் அறிவிக்க விசேட இலக்கம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்...
அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் – பொதுமக்களிடம் தே...
மே 9 ஆம் திகதிக்கு பின்னர் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கட்சி பேதமின்றி கடும் நடவடிக்கை – பா...