ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: தனியான விசாரணை நடைபெறும் என பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு!

Tuesday, December 13th, 2016

“அம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற குழப்பநிலையின் போது  கடற்படைத் தளபதியால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்ட மற்றும் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் செய்தி தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும், இந்த விடயம் தொடர்பில்   தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளோம்.” என  பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்ட மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி கடந்த 7ஆம் திகதி முதல் சத்தியாக்கிரகப் போராட்டதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாகம்புர துறைமுகத்திற்கு வந்திருந்த ஜப்பான் நாட்டு கப்பல் ஒன்று உட்பட இரண்டு கப்பல்களை ஊழியர்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்தக் கப்பல்களை விடுவிக்கும் முகமாக கடற்படைத் தளபதி உள்ளிட்ட கடற்படை குழுவொன்று கடந்த சனிக்கிழமை குறித்த இடத்திற்குச் சென்றிருந்தது.

இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலையால் இரு ஊடகவியலாளர்கள் கடற்படையால் தாக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் என்று ஊடக அமைச்சு நேற்றுமுன்தினம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

எனினும், இந்தச் சம்பவத்தின்போது கடற்படைத் தளபதி ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவில்லை என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தர்.

சம்பவம் குறித்து அவரிடம் வினவியபோது அவர் கூறியதாவது:-

“தான் எந்தவொரு ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்று கடற்படைத் தளபதி என்னிடம் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்கள் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும் சம்வபவம் குறித்து நான் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை முன்னெடுப்பேன்” – என்றார்.

karunasena-22

Related posts: