உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை இருக்காது – லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021

லாஃப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், உள்ளூர் சந்தையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பற்றாக்குறை இருக்காது என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, சந்தையில் நிலவும் கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய அளவு தம்மிடம் கையிருப்பு உள்ளது என்றும், சந்தையில் காணப்படும் எந்தவொரு நிறத்தினாலான வெற்று சமையல் எரிவாயு கொள்கலனுக்கும், சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றை தம்மால் வழங்க முடியும் எனவும் லிட்றோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் இலங்கையின் உள்நாட்டு எரிவாயு தேவையில் 20% பூர்த்தி செய்யும் லாஃப் கேஸ் அதன் இறக்குமதியை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், லிட்ரோ கேஸ் அந்த தேவையை பூர்த்தி செய்யும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் சமையல் எரிவாயு ஏற்கனவே உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நிரம்பலுக்கு அமைய அவசியம் ஏற்படின் சமையல் எரிவாயுவினை இறக்குமதி செய்யும் திறன் மற்றும் சந்தை வலையமைப்பை லிட்ரோ கேஸ் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: