உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை நிறுவுவது குறித்த வர்த்தமானி!

Wednesday, February 14th, 2018

உள்ளூராட்சி மன்ற அதிகாரங்களை நிறுவுவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று(14) வெளியிடப்பட உள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தேர்தலுக்கு பின்னர் தேசிய தேர்தல் ஆணையகத்துடன் கலந்துரையாடி  எடுக்கப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் கூட்டங்களை நடத்தும் போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படும் எனவும் அதுகுறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பத்மசிறி தெரிவித்துள்ளார்.

Related posts: