உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய வர்த்தமானியை செயற்படுத்தும் காலம் ஒத்திவைப்பு

Monday, July 3rd, 2017

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் விதிகளை செயற்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிக்கையை நடைமுறைப்படுத்தும் காலம் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூலை முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவிருந்தது.  எதுஎவ்வாறு இருப்பினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறாமையால், அந்த வர்த்தமானி அறிவித்தலை செயற்படுத்த முடியாதுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த நடவடிக்கை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய புதிய வர்த்தமானி அறிவித்தலை வௌியிட, கடந்த வௌ்ளிக்கிழமை உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறின் அதனை செயற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகின்றது.

Related posts: