உலக வங்கியிடம் இருந்து மேலும் நிதி உதவி !

Friday, May 28th, 2021

இதுவரையிலும் வழங்கப்பட்டிருந்த நிதி ஒதுக்கீடுகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை வந்துள்ள உலக வங்கியின் விசேட பிரதிநிதிகள் குழு மே மாதம் 17 ஆம் திகதிமுதல் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள் அமைப்பின் செயற்திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், 2019 ஆம் ஆண்டு இலங்கையில் 50 வைத்தியசாலைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியினால் செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தினூடாக, வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும்  நோய் வாய்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான பாதிப்பை குறைப்பதற்காக தமது வைத்தியசாலை பிரிவிலுள்ள பிரதேச மக்களை பதிவு செய்து, அவர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் நோய்களை தாமதமின்றி அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகள் உள்ளிட்ட சமூக அளவிலான சேவைகள் மக்கள் மத்தியில் செயல்படுத்தப்பட்டன.

அத்துடன், இச் செயற்திட்டமானது 2020 ஆம் ஆண்டு 150 வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த 150 வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக குறித்த கணிப்பீட்டின் படி கண்காணிக்கப்படும்.

இதன்படி உலக வங்கியும், இலங்கை அரசும் உடன்பட்டதற்கமைய உலக வங்கிக்கு அறிக்கை வழங்கிய பின்னர் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்த நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு வழங்கப்படும் ஒதுக்கீடானது 2020 ஆம் ஆண்டுக்குறியதாகும், என்று வைத்தியர் ஜெயசுந்தர பண்டார மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: