உலக தொழிலாளர் தினம் நாளை – யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்படும் மே தினக் கொண்டாட்டங்கள்!

Tuesday, April 30th, 2024

நாளை உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம் (01)   மே தினக் கொண்டாட்டங்களில் காணொளி பதிவு செய்ய அனுமதியின்றி ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத தெரிவித்துள்ளார்.

இது, நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

மே தினப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேறகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை மே தின பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் நாட்டிலுள்ள பிரதேச செயலக பகுதிகளில் அனைத்து வகையான மதுபானங்களையும் விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது.

எவ்வாறாயினும் மதுக்கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் இன்றும் மே 2 ஆம் திகதியும் வழமையான மூடும் நேரம் வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின்  கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் பொட்டிக் வில்லாக்கள், கலால் உரிமம் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மே தினத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள பேரணி மற்றும் நிகழ்வுகள் காரணமாக, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பு பணிகளில் 6,000 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் குறித்த தினத்தில் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: