உலக சுகாதார தினம் இன்று

Thursday, April 7th, 2016

உலக சுகாதார தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார தினமாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.இந்த வருடத்தின் சுகாதார தினத்தின் தொனிப் பொருளாக நீரிழிவு நோய்த் தடுப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு, நீரிழிவிலிருந்து தப்புதல் மற்றும் உறுதிப்பாடு ஆகியன இந்த வருட சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

உலகம் முழுவதிலும் 422 மில்லியன் பேர் நீரிழிவு தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கையின் மக்கள் தொகையில் 11.5 வீதமானவர்கள் நீரிவினால் அவதியுறுவதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மகிபால தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சுகாதார தினத்தின் தொனிப்பொருளாக உணவுப் பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Related posts: