உலகின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஐஎம்ஃஎப் வருத்தம்!

தற்போதைய உலகின் பொருளாதார முன்னேற்றம் தொடர்ந்தும் பலவீனமாகவும் ஆபத்தான நிலையிலும் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சுமார் பத்தாண்டுகள் கடந்த பிறகும் பொருளாதார முன்னேற்றத்தை காண முடியவில்லை என ஐ எம் ஃஎப் கூறுகிறது.இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் 3.1 சதவீத அளவுக்கே வளர்ச்சி அடையுமென்றாலும் அடுத்த ஆண்டு சற்று அதிகரிக்கும் என அந்த அமைப்பு கணித்துள்ளது.
பொருளாதார மந்தநிலையானது வளர்ச்சியை கடுமையாக பாதிக்க்கும், அது திறமைகளை மழுங்கடித்து உற்பத்தியை குறைத்துவிடும் எனவும் ஐ எம் ஃஎப் தெரிவித்துள்ளது.
பொருளாதார ஏற்றதாழ்வகள் கடும் அரசியல தாக்கங்களை ஏற்படுததி பல நாடுகளில் கொநதளிப்பை உருவாக்கயுள்ளது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
சரவதேச அளவிலான பொருளாதார ஒருங்கிணைப்பால் ஏறபடக் கூடிய நன்மைகள் குறித்து வெளியாகும் உடன்பாடுகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ள ஐ எம் ஃஎப், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவு ஆகியவற்றை இதற்கு சான்றாகக் காட்டியுள்ளது.
Related posts:
|
|