உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்கள் – தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் – சுகாதார அமைச்சு நடவடிக்கை!

Wednesday, November 15th, 2023

உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் விலை நிர்ணயக் குழு ஒன்றின் ஊடாக மருந்து விலையை தீர்மானிக்குமாறு இதன்போது பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகளை சரியான முறைகளில் இறக்குமதி செய்ய இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: