உரியநேரத்தில் தேர்தலை நடத்தாமையானது ஜனநாயக மறுப்பாகும் – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு

Friday, August 4th, 2017

தேர்தல்கள் தொடர்பானசட்டவாக்கத்தைநிறைவேற்றும் அதிகாரமானது, பாராளுமன்றத்திடமும், உயர் நீதிமன்றத்திடமுமே தங்கியுள்ளபோதிலும், தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தவேண்டிய கடமைப் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிடமே உள்ளதென மக்கள் கருதுவதனால், இவ்விடயத்தை அரசிடம் வலியுறுத்தவேண்டிய கடப்பாடு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது என்றும், உரியகாலத்தில் தேர்தல்களை நடத்தாதிருப்பது ஜனநாயக மறுப்பாகும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடல் இன்றையதினம்(04.082017) தேர்தல் ஆணையகத்தில் நடைபெற்றது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெறவேண்டிய மாகாணசபைகளுக்கான தேர்தல்களைஅரசாங்கம் ஒத்திவைத்து, அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்களையும், 2019 நடத்தப்படும்எனஅமைச்சரவைதீர்மானம் எடுத்திருப்பதாக வெளியான ஊடகங்களின் செய்தி தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்ததேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தொடர்ந்து உரையாற்றுகையில், உள்ளுராட்சிசபைகளுக்கான தேர்தல்களை மேலும் காலதாமதப்படுத்த முடியாது எனும்தமது நிலைப்பாடு தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

இக்கலந்துரையாடலின் போதுகுறிப்பாககூட்டு அரசாங்கத்தின் பிரதான கட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்திகருத்துக் கூறியதேர்தல் ஆணையாளர்,தேர்தல்களைதகுந்தநேரத்தில் நடத்தாமையானதுஅப்பட்டமான ஜனநாயகமீறல் எனத் சுட்டிக்காட்டியதுடன்,இது தொடர்பானசட்டவாக்கத்தைநிறைவேற்றும் அதிகாரமானது, பாராளுமன்றத்திடமும்,உயர்நீ திமன்றத்திடமுமே தங்கியுள்ளபோதிலும், தேர்தல்களை உரியநேரத்தில் நடத்தவேண்டிய கடமைப் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிடமே உள்ளதென மக்கள் கருதுவதனால், இவ்விடயத்தை அரசிடம் வலியுறுத்தவேண்டியகடப்பாடுதேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் ஆணைக்குழுவினர் அரசின் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

இக்கலந்துரையாடல் கருத்துத் தெரிவித்தகூட்டரசாங்கத்தின் பிரதானகட்சிகளின் பிரதிநிதிகள் ,தமது அரசாங்கத்திற்கு தேர்தல்களை காலதாமதப்படுத்தவேண்டிய அவசியம் இல்லைஎனவும், உள்ளுராட்சிசபைகளின் தேர்தல்களைஎதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னரும், ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை உரிய காலத்திலும் நடத்திமுடிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

இக்கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளானமகிந்ததேசப்பிரிய, ஜனாதிபதி சட்டத்தரணிநளின் அபேசேகர, பேராசிரியர் இரத்தினஜீவன் ஹ_ல் உள்ளிட்டஐவர் பங்குபெற்றிருந்தனர்.

Related posts:


தையிட்டி ஆவளை பகுதியில் பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள மயானத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் - அரச...
இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர...
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பி செலுத்தப்பட்டது - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ...