உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இந்தியா விஜயம்!

Saturday, October 15th, 2016

 

பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றத்தைக் குறிக்கும் வகையில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா பயணம்.

8வது தடவையாக நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாட்டின் தலைமை பொறுப்பும் உபசரிப்பு பொறுப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்தியாவின் கோவாவில் இந்த மாநாடு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்தியா. சீனாஇ ரஷ்யா, பிரேசில், தென் ஆபிரிக்கா ஆகிய வளர்ச்சியடைந்து வரும் ஐம்பெரும் பொருளாதார நாடுகளும் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், தாய்லாந்து மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளும் உட்பட ஆப்கானிஸ்தான் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்களும் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

இந்த மாநாட்டிற்கு இடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

1420945389yarlminnal.com-5

Related posts:

மக்களின் தேவைகளை உணர்ந்து செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் - ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர...
யாழ்ப்பாணத்தை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பொதுமக்களின் உதவி அவசியம் - யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. ம...
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு - இவ்வருடம் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இ...