உணவு விசம் – யாழில் 7 வயது மாணவன் பலி!

Tuesday, May 28th, 2019

யாழ்.பரியோவான் கல்லூரியில் கல்வி கற்று வரும் தரம் 2 மாணவன் ஒருவர் கோழி இறைச்சி நஞ்சாகியதால் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் சமைத்த உணவு விசமடைந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது இரண்டு சகோதரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவரது இரண்டு சகோதரர்களும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: