உணவு நெருக்கடியால் எவரையும் பாதிக்கவிடக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 18th, 2022

உணவு நெருக்கடியில் எவரையும் பசியில் வாடக்கூடாது என்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடும் என்றாலும், அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் குழுவொன்றை நியமித்து அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷத் டி சில்வா மற்றும் ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளை இணைக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் திட்டத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமுல்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மீனவ மக்களுக்கு உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: