உணவகங்களை சோதனை செய்ய குழு நியமிப்பு!

Wednesday, March 27th, 2019

யாழ்ப்பாண மாநகரப்பகுதியில் உள்ள உணவகங்களை சோதனை செய்வதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநகர சபையில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தக்குழு அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகரப்பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் சுகாதார முறைப்படி, உரிய அனுமதிப்பத்திரத்துடன் செயற்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்காக இந்தக்குழு அமைக்கப்படவுள்ளது. பொது சுகாதாரப்பரிசோதகர்கள் மற்றும் வரமான வரித்துறையினரை உள்ளடக்கியதாக இந்தக்குழு அமைக்கப்படவுள்ளது.

முறையான அனுமதிப்பத்திரம், உணவு கையாளுபவர்களுக்கான மருத்துவ அறிக்கை, சமையல் வேலை பரிமாறுபவர்களுக்கான வலைத்தொப்பி மற்றும் அங்கிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related posts: