உடுவில் மகளிர் கல்லூரி சம்பவங்கள் மன வேதனைக்குரியது- யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளை!

Friday, September 9th, 2016

 

பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்தசனிக்கிழமை முதல் நடைபெற்ற சம்பவங்கள் மிகவும் வேதனையையும் மனவருத்தத்தையும் தருவாக யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

இந்த ஆண்டின், கடந்த இரண்டாந் தவணை வரை இந்த பாடசாலையின் நிர்வாகத்தை திறம்படநடாத்தி வந்த திருமதி சிராணி மில்ஸின் சேவை நீடிப்பு காலத்தை ஏன் இந்த நிர்வாகசபையால் வழங்க முடியவில்லை?

இதற்கு முன்னர் இப்பாடசாலையில் 60 வயதிற்குமேற்பட்டவர்கள் பலர் அதிபர்களாக இருந்து வந்துள்ளனர்.ஒரு சிலர் 68 வயது வரைஅதிபர்களாக கடமையாற்றியுள்ளனர். ஆனால் சிறப்பாக பாடசாலையை நடத்தி வந்த திருமதிசிராணி மில்ஸிற்கு ஏன் இந்த சேவை நீடிப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து எமக்குமனவருத்தத்தை தருகிறது.

திருமதி சிராணி மில்ஸ் ஒரு தசாப்த காலத்திற்கு மேல்இப்பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டுள்ளார்.திறமையாக பலரும் மெச்சும்அளவிற்கு அவர் பாடசாலையை நிர்வகித்துள்ளார்.

அமெரிக்கன் மிஷனரியினர், யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளை உருவாக்கியதன்நோக்கத்திற்கு புறம்பாக இந்தக் கல்லூரியின் நிர்வாகசபை செயற்படுகின்றதோ என்றசந்தேகம் எமக்கு எழுகின்றது.இந்தப் பாடசாலையை நிர்வகிப்பதற்கு அமெரிக்காவில்இருந்து வருடாந்தம் பெருந்தொகையான பணம் கோடிக்கணக்கில் அனுப்பப்படுகின்றன.

இந்தப்பாடசாலையை சரியான வழியில் நிர்வகிக்காவிட்டால் இந்தப் பாடசாலையின் எதிர்காலம்பெரும்கேள்விக்குறியாகிவிடும்.

ஏற்கனவே இப்பாடசாலையின் மூன்றாம் தவணையை ஆரம்பிப்பதற்கு அறிவிக்கப்பட்ட திகதிஇந்த மாதம் 05ம் திகதியில் இருந்து பின்னர் திடீர் என 08ம் திகதியாகமாற்றியதற்கான காரணம் என்ன?இந்தத் தடுமாற்றத்திற்கு என்ன காரணம்? எனப் பலகேள்விகள் எழுகின்றன.

இப்படி மாணவர்களைக் காரணம் இன்றிக் குழப்புவதாக நிர்வாக சபைசெயற்படுவது தவறென நாம் கருதுகின்றோம் என இவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 14225403_1581932405442728_4882721973128130838_n

Related posts:

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 7 ஆயிரம் பேர் மீது வழக்குத் தாக்கல் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோக...
ஜனாதிபதி செயலக வளாகத்தில் குற்றச்செயல்கள் நடவடிக்கை - குற்றத்தடுப்பு அதிகாரிகள் மற்றும் கைரேகை அதிக...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழை...