உசுப்பேற்றும் அரசியல் இன்னும் ஓயவில்லை!

Monday, April 3rd, 2017

“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராப் பிரச்சினையாக இருந்தால்தான், தாம் அரசியல் நடத்தலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று நாம் நீண்டகாலமாகவே கூறிவருவது மீண்டும் ஒரு தடைவ நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமது நிலங்களை விடுவித்து தம்மை மீண்டும் சொந்த வாழ்விடத்தில் குடி ஏறுவதற்கு அனுமதிக்கப் படவேண்டும் என்று கேப்பாபுலவில் மக்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்ற நிலையில், அவர்களுக்காக பேச்சுவார்த்தைகளை நடத்தியும் அதற்கான போராட்டங்களை நடத்தியும் ; தீர்வைப் பெற்றுக் கொடுக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அந்தமக்களின் போராட்ட கொட்டகைக்குள் சென்றுபோராடுங்கள் , போராட்டத்தைகை விடவேண்டாம் என்று கூறுவது நகைப்புக் குரியதாகவே இருக்கின்றது.

அந்த மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க இயலாதவர்கள், மக்களைப் போராடுமாறு கேட்கின்றனர். அரசுடன் இணக்க அரசியல் நடத்தும் இவர்கள், தமிழ் மக்களுக்காக அரசுக்குள் போராடவேண்டும். அரசிடமிருந்து தீர்வுகளையும், நியாயத்தைம் மக்களுக்கப் பெற்றுக் கொடுக்கவேண்டும்.

அன்மையில் கேப்பாபுலவுக்குச் சென்றிருந்த கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் அந்தமக்களிடம் “நீங்கள் தொடர்ந்து வீதியில் இருந்து போராடுங்கள். நாங்களும் உங்களுடன் இணைந்துகொள்வோம்” என்று உணர்ச்சி பொங்க கூறியதாக தெரிவித்தமக்கள் “தமக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிட்ட இவர்கள், இப்போது எம்மை வீதியில் நின்று போராடுமாறு கூறுகின்றார்கள் என்று விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இப்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து நிலமீட்புக்காக போராட வேண்டியகாலம் வந்துவிட்டதாக கூறுகின்ற இவர்கள். வாரத்திற்கு ஒருமுறை “போராட்டம் வெடிக்கும்” என்று மக்களை உசுப்பேற்றும் கதை கூறிக்கொண்டிடு இக்கின்றார்கள். அரசாங்கம் அரசாங்கமாகவே இருக்கும். அரசாங்கத்தை அணுகுகின்றவர்களின் ஆளுமையிலேயே வெற்றிதங்கியுள்ளது. போதுமான அரசியல் பலத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வழங்கியிருந்தபோதும், அதைதமிழ்த் தேசியக் கூட்டமைப்புசரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தமிழ்மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி வீதியில் போராடுகின்ற நிலையில் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றமுடியாது என்பதாலேயே தற்போது கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேண்டும் என்றும், தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருலிந்து வெளியேற வேண்டும் என்றும் தமக்கிடையே குடுமிச் சண்டையை ஆரம்பித்திருக்கின்றார்கள். இது கூட நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தல்களை நோக்கமாகக் கொண்ட தந்திரோபாயமா? என்ற சந்தேகம் தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது.

Related posts:


யாழ் மாவட்டத்தில் அரிசி வகைகளுக்கு விலை நிர்ணயிக்கப்படும் - கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை ...
லீசிங் நிறுவனங்கள் தொடர்பில் 30 ஆம் திகதிக்கு முன்னர் பொது மக்களின் முறைப்பாடுகளை பெற நடவடிக்கை!
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் - குற்ற...