உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு வீடுகள் – தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா!

Monday, January 17th, 2022

இலங்கையில் வீடுகள் இன்றி வாழும் மக்களுக்கு அதற்கான தீர்வினை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கொலன்னாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்த வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக் கருவான உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ், கொலன்னாவ பகுதியில், அடிகல் நாட்டப்பட்டு 43 நாட்களில் உரியவர்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: