ஈ.பி.டி.பியின் முயற்சியால் துணவி – சங்கானை சேச் வீதி புனரமைப்பு!

Tuesday, August 7th, 2018

50 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த துணவி – சங்கானை சேச் வீதிக்கு செல்லும் வீதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புனரமைப்பு செய்யப்படுகின்றது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட குறித்த துணவி – சங்கானை சேச் வீதியை புனரமைத்து தருமாறு குறித்த பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்

இந்நிலையில் மக்களின் தேவைப்பாடுகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு; கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணனின் முயற்சியால் முன்னுரிமைப்படுத்தப்பட்டு குறித்த வீதி வலிகாமம் மேற்கு பிரதேச சபையால் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

38712078_198366517699508_6373137056675135488_n

38717381_499581323800870_4098059950469677056_n

38763909_248395699331358_2772350923702272000_n

Related posts:


“ஆசியாவின் எதிர்காலம்” மாநாட்டில் கருத்துரை வழங்கும் தென்னாசியாவின் முதலாவது தலைவர் கோட்டபய - ஜப்பான...
அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, நாடாளுமன்...
பரிசூதிய சீட்டுக்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் - திறைசேரியின் அனுமயும் கிடைத்துள்ளதாக தேசிய லொத்த...