ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : காப்பெற் வீதியாக மாற்றம் பெறுகிறது வேலணை சிற்பனை வீதி !

நீண்டகாலமாக புரமைப்பு செய்யப்படாது காணப்பட்டுவந்த வேலணை – சிற்பனை வீதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் சீரமைக்கப்படவுள்ளதாக வேலணை பிரதே சபை தவிசாளரும் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வேலணை பிரதேச சபையின் அபிவிருத்தியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டுவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து மக்களது தேவைப்பாடுகளை நிறைவு செய்து கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஊடாக எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேலணை பிரதேச சபையின் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பிற்பாடும் அப்பணி தொடர்ந்து எம்மால் முன்னெடுக்கப்படுகின்றது.
அதன் ஒரு திட்டமாகவே வேலணை சிற்பனை பிரதேச மக்களது வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதி சீரமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக துறைசார் அமைச்சிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சி காரணமாக மத்திய அரசின் நிதி பங்களிப்பின் மூலம் 1கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த வீதி அபிவிருத்தி செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|