இ.போ.சவில் முறைகேடு – ஊழியர்கள் உணவு ஒறுப்பு போராட்டம்!

Wednesday, February 20th, 2019

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் சில ஊழியர்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் வழங்கப்பட்ட முறைகேடான பதவி உயர்வை இரத்து செய்யக்கோரி, சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று அதிகாலை தொடக்கம் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது முறைகேடாக பதவி உயர்வுகளை இரத்து செய் , தகுதி சேவைக்காலம் , கல்வித்தகமை பாராது பதவி உயர்வு வழங்க முடியுமா?, தொழில் சங்கமே சாராயம் வாங்கிக் குடித்து சலுகைகளை அள்ளிக் கொடுக்காதே, 750 ரூபா நாளாந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கு, இ.போ.ச பதவி உயர்வில் அரசியல் வந்தது எப்படி?, 1000 ரூபா ஒப்பந்த சாரதி காப்பாளர்களை நிரந்தரமாக்கு , ஜனாதிபதியே முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வுகளை இரத்து செய்யுங்கள், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கியது எப்படி? போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பாதாதைகள் போராட்ட இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளன.

Related posts:


அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை...
தொடரும் சீரற்ற வாநிலை - யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவதை தாமதிக்குமாறு பணிப்பாளர் அறிவ...
கிராம புறங்களிலுள்ள பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் - பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும...