இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை!

Tuesday, April 6th, 2021

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மே செப்டம்பர் மாதங்களில் 2000 முதல் 5000 வரை இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து தூதரகங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சகங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் ஏரோஃப்ளைட், ஷார்ஜாவின் ஏர் அரேபியா, துபாய், ஃப்ளைடூபாய், இந்தியா விஸ்டாரா விமான நிறுவனங்கள் மற்றும் குவைட் ஜசீரா விமான நிறுவனங்கள் மூலம் இலங்கைக்கு நேரடி விமான சேவையை தொடங்க கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:


வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிருபம் -நீதிச் சேவைகள் ஆணைக்குழு!
முச்சக்கர வண்டி ஒழுங்குமுறை தொடர்பான உத்தேச வரைவு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிப்பு!
போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி...