இஸ்ரேலில் வேலை வாய்ப்பு – எந்தவொரு வெளி முகவர்களிடமும் பணம் செலுத்த வேண்டாம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவுறுத்து!

Monday, December 11th, 2023

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளை உறுதியளிக்கும் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, மோசடியின் தீவிரத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பணம் செலுத்தியவர்கள் இஸ்ரேலில் எந்தவொரு உத்தியோகபூர்வ வேலை வாய்ப்புகளுக்கும் தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள்.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஈடாக தனிநபர்கள் முகவர்களாகக் காட்டிக்கொண்டு பணத்தைக் கோருவதாக அமைச்சுக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன.

இஸ்ரேலில் முறையான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்கள் மட்டுமே தேவை என அமைச்சு தெளிவுபடுத்துகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இந்தக் கட்டணங்களை வசூலிக்க அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: