இலவசமாக மருந்துகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்!

Wednesday, November 1st, 2017

அரச மருந்தாளர்கள் சங்கம் இன்று (01) முன்னெடுக்கப்படும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பினால் நோயாளிகள் சிரமங்களுக்கு உள்ளாவதனை தடுக்கும் முகமாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்து ஒசுசல மருந்தகங்களிலும் இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்பின் கீழ் மேற்குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அரச வைத்தியசாலைகளின் உள் மற்றும் வெளி நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு இவ்வாறு மருந்துகள் வழங்கப்பட உள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.எம்.எம்.ரூமி தெரிவித்துள்ளார்.

Related posts: