இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!

இலண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலண்டன் சிற்றி விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் வோட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இப்பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்தாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இப்பொதிகள் மூன்றும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பொதிகள் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
திருமலை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கும் தீர்மானம் விரைவில் - பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட...
தரம் 5 புலமைப் பரிசில் மேன்முறையீடு 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும்!
கொரோனா: உதவிக்கரம் நீட்டிய பிரபல டென்னிஸ் வீரர்..!
|
|