இலங்கை வருவதற்காக வெளிநாடுகளில் 56,297 இலங்கையர்கள் காத்திருப்பு – இலங்கை வெளிநாட்டமைச்சு!

Saturday, August 22nd, 2020

கொரோனா பரவலையடுத்து வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதற்காக விருப்பம் வெளியிட்டிருந்த இலங்கையர் 23 ஆயிரத்து 723 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்னமும் 56 ஆயிரத்து 297 பேர் நாடு திரும்பக் காத்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை இலங்கைக்கு மீள அழைத்துவரப்பட்டுள்ள 23 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் 93 நாடுகளிலிருந்து இங்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டமைச்சு தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கு மீளத் திரும்புவதற்காக காத்திருக்கும் 56ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் பலரும் கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்காரணமாகவும் , தொழில் இழப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வர்களாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: