இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 28th, 2020

இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது..

வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலை அடுத்து இருவரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது பேசிய இலங்கை வெளிவிவகார அமைச்சர், அமெரிக்காவுடனும் ஏனையநாடுகளுடனும் இலங்கை உறவுகளை வளர்த்துக்கொள்ளும் என்று தெரிவித்ததுடன், இலங்கை பக்கச்சார்பற்ற அணிசேரா நாடு என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: