இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, April 29th, 2020

சமகாலத்தில் Ransomware என்ற சைபர் தாக்குதலுக்கு இலங்கையர்கள் முகங்கொடுப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் –

விசேடமாக இளைஞர்கள் பலர் இந்த நாட்களில் பல்வேறு கணினி விளையாட்டுகள் மற்றும் அதற்கான Crackகளை பல்வேறு இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள செல்லும் போது Ransomware சைபர் தாக்குதலுக்கு சிக்க நேரிட்டுள்ளது.

Ransomware மூலம் கணினியில் உள்ள பெறுமதியான தரவுகள் வெளியே பெற முடியாத வகையில் Encrypt முறை செய்யப்படுகின்றது. தரவுகளை மீண்டும் பெற முடியாத வகையில் Decrypt செய்யப்பட்டு அதனை மீள பெற வேண்டும் என்றால் கப்பமாக பணம் செலுத்த வேண்டும் என குறித்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளும் குழு கோரிக்கை முன்வைக்கிறது.

இந்த சைபர் தாக்குதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு கணினிகளில் விளையாட்டுகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது உத்தியோகபூர்வ இணையத்தளங்களை மாத்திரம் பயன்படுத்துங்கள் என இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்வதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts: