இலங்கை ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவக சட்டம் நிறைவேற்றம்!

Wednesday, August 9th, 2017

இலங்கை – ஜெர்மன் தொழிநுட்ப கற்கை நிறுவகம் தொடர்பாக சட்ட மூலம், திருத்தம் இன்றி நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து இளைஞர் யுவதிகளையும் சகலத்துறை விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.வெளிநாட்டு ராஜதந்திரிகள் நாட்டில் சிறந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே எதிர்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு செய்யப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றம் சுமத்தினார்.மன்னார் மாவட்ட கிராமப்புற விளையாட்டுத்துறை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரினார்.இதன்போது குறுக்கிட்ட வடகிழக்கு கிராமபுற விளையாட்டு மைதான புனரமைப்புக்களுக்காக அடுத்த வருட பாதீட்டில் விஷேட திட்டம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.இரத்மலானை வலது குறைந்தோருக்கான பாடசாலையில் மேலும் 50 மாணவர்களுக்கான வதிவிட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts: