இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும்  – ரோஷன் மஹானாமா!

Friday, September 21st, 2018

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து அதன் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் என ரோஷன் மஹானாமா கூறியுள்ளார்.

ஆசிய கிண்ண தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்ற இலங்கை அணி வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் படுதோல்வி அடைந்து தொடரிலிருந்து தொடக்கத்திலேயே வெளியேறியது.

இதனால் இலங்கை அணி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹானாமா, இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து நிர்வாகம் வெட்கப்பட வேண்டும்.

கிரிக்கெட் ஆட்டங்களை பார்க்க நான் அதிக நேரம் செலவழிப்பதில்லை.

இலங்கை அணி தோல்வியால் தவிப்பதை தாங்க முடியவில்லை, என்ன நடக்கிறது என்பதை நிர்வாகிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

Related posts: