இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க ஹொங்கொங் தீர்மானம்!

Tuesday, August 17th, 2021

கொரோனா பரவல் காரணமாக, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளின் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டுக்கு பயணிப்பதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமைமுதல் ஹொங்கொங் மேலும் கடுமையாக்கவுள்ளது.

இதனடிப்பயைில் இலங்கைக்கு மேலதிகமாக, பங்களாதேஷ், கம்போடியா, ஃப்ரான்ஸ், கிறீஸ், ஈரான், மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, தன்சானியா, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அமெரிக்கா முதலான நாடுகளுக்கு இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளன.

இதற்மைய, இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஹொங்கொங்கிற்குள் உள்நுழையும்போது, இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: