இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளது – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Thursday, June 8th, 2023

கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,483 மில்லியன் (3.5 பில்லியன்) அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் இந்நாட்டின் அதிகாரப்பூர்வ கையிருப்பு 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. சீனா வழங்கிய 1.4 பில்லியன் நிதி வசதியும் இதில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts: