இலங்கையில் 3,333 பேருக்கு கொரோனா உறுதி!

Saturday, September 26th, 2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,333 ஆக அதிகரித்துள்ளது.இதன்படி, நாட்டில் நேற்றையதினம் 09 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கட்டாரில் இருந்து வருகை தந்த மூவருக்கும் குவைட்டில் இருந்து வந்த இருவருக்கும் ஈரானில் இருந்து வந்த இருவருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவருக்கும் மற்றும் மாலைத்தீவில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3142 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது 178 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகினறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

யாழ்ப்பாணத்து மக்கள் முட்டாள்கள் அல்லர்: ஆர்னோல்டுக்கு சுட்டிக்காட்டுகிறார் ஈ.பி.டி.பியின் மாநகர உறு...
அறுவடைகளை 18தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளுங்கள் - வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணை...
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை பேணுவதற்காகே சுகாதார தளர்வு - மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எ...