இலங்கையில் நேற்றைய 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்!
Saturday, April 10th, 2021இலங்கையில் நேற்றையதினம் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
இதற்கமைவாக, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 593 இல் இருந்து 595 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் நேற்று (09) 228 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 91,272 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் மேலும் 183 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்தில் நிறப்புற நடைபெற்ற ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!
சீன நாட்டின் உயர் அரசியல் ஆய்வாளர் - பிரதமர் சந்திப்பு!
இரண்டாம் தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருகின்றது - ...
|
|