இலங்கையில் நேற்றும் 1923 கொரோனா தொற்று : 13 பேர் உயிரிழப்பு!

Tuesday, May 4th, 2021

இலங்கையில், இன்றையதினம் 13 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரை 709 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை 1923 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 98 ஆயிரத்து 209 பேர் குணமடைந்துள்ளதோடு , 14 ஆயிரத்து 758 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: